திருவள்ளூர் அருகே உள்ள செங்குன்றம் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புழல் ஏரிக்கரையின் எதிரே மரக்கன்றுகளை நடவைத்து பராமரிக்க நாரவாரிக்குப்பம் செயல்அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.