ETV Bharat / state

50% பணியாளர்கள் கொண்டு தொழில் செய்ய அனுமதி! - திருவள்ளூரில் 50 சதவீத பணியாளர்கள் கொண்டு தொழில் செய்ய அனுமதி

திருவள்ளூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு 50 விழுக்காடு பணியாளர்கள் கொண்டு தொழில் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

50 சதவீத பணியாளர்கள் கொண்டு தொழில் செய்ய அனுமதி

author img

By

Published : May 5, 2020, 11:59 AM IST

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஊரடங்கு உத்தரவு வரும் மே17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிப்பு செய்யப்படுவதாக ஆணையிட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில்,

“ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மேலும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். நோய் கட்டுப்பாடு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறையின்படி எந்தவித தடங்கலுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதியைத் தவிர திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பணிகள் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

50 விழுக்காடு பணியாளர்கள் கொண்டு குறைந்தபட்சம் 20 நபர்கள் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள பகுதிகளில் ஊரக, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்பட அனுமதிக்கப்படும். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப ஜவுளி நிறுவனங்கள் 50% பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

தொழில் நகரங்களில் தொழிற்பேட்டைகள் 50% பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகரப் பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 விழுக்காடு பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும். பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட சுய திறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதிபெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளுக்குத் தேவையான ஹார்ட்வேர், சிமெண்ட், கட்டுமான பொருள்கள், மின் சாதன விற்பனைக் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமான பொருள்களை எடுத்துச்செல்ல எந்தவித தடையுமில்லை. செல்ஃபோன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருள்கள், மின்மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை, பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து திருப்பூர் வந்த இருவருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.