ETV Bharat / state

பொன்னேரி அருகே ஆபத்தான பாதையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்!

திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி அருகே பரணம்பேடு காலனியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஆபத்தான பாதையை கடந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான பாதையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்; புதிய பள்ளி கட்டிடம் வேண்டி கோரிக்கை

author img

By

Published : Jun 21, 2022, 12:40 PM IST

திருவள்ளூர்: பொன்னேரி கிளிகோடு ஊராட்சிக்கு உட்பட்டது பரணம்பேடு காலனி. இந்த காலனியில் உள்ள சிறுவர் சிறுமியர் ஏரிக்கரை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். ஏரிக்கரை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும்போது அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

ஆபத்தான பாதையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்; புதிய பள்ளி கட்டிடம் வேண்டி கோரிக்கை

மேலும் மழைக்காலங்களில் ஏரியில் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் குளிக்க இறங்கினால் அவர்களது உயிருக்கும் ஆபத்து உள்ளது. பரணம்பேடு காலனியில் இருந்து தற்போது 38 மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வருகின்றனர்.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி காலனியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் அருகே காலி மைதானத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து புதிய பள்ளி கட்டிடம் அமைக்க கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்கள் போதை வஸ்துகளை உபயோகிப்பதைத் தடுக்க நடவடிக்கை - திருவள்ளூர் ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.