உலகமெங்கும் கரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில் பொது மக்களிடையே மிகப்பெரிய பீதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோழிக்கறி சாப்பிடுவதைப் பொது மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள கோழிக்கறி கடைகளில் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களாகவே கோழிக்கறி விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளதால் வியாபாரிகள் ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 30க்கு விற்று வருகின்றனர்.
மேலும் கோழிக்கறி வாங்கி சாப்பிட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாத நிலையில் பெரும்பாலான கோழிக்கறி கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் பிரியாணி, சிக்கன் பகோடா விற்பனையும் வெகுவாகக் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.