ETV Bharat / state

செல்லம்மா - பாரதி ரத யாத்திரை தொடக்கம்

செல்லம்மா - பாரதி ரத யாத்திரை நேற்று திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியிலிருந்து தொடங்கியது.

author img

By

Published : Apr 18, 2022, 11:30 AM IST

செல்லம்மா - பாரதி ரத யாத்திரை தொடக்கம்
செல்லம்மா - பாரதி ரத யாத்திரை தொடக்கம்

திருவள்ளூர்: பாக்கம் சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் செல்லம்மா - பாரதி ரத யாத்திரை நேற்று (ஏப்.17) வேப்பம்பட்டு பகுதியிலிருந்து தொடங்கியது. தென்காசி மாவட்டம் கடையம் நோக்கி செல்லும் இந்த ரத யாத்திரையை மகாகவி பாரதி - செல்லம்மாவின் கொள்ளு பேத்தி உமாபாரதி தொடங்கி வைத்தார்.

செல்லம்மாவின் தோளில் கைவைத்தபடியான, பாரதியின் 7 அடி உயர சிலையை சிற்பி சுரேந்திரநாத் உருவாக்கி உள்ளார். அவரின் இல்லத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது.

செல்லம்மா - பாரதி ரத யாத்திரை தொடக்கம்

இந்நிலையில், சிற்பி சுரேந்திரநாத் வீட்டிலிருந்து நேற்று காலை கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயாவிற்கு சிலை கொண்டு செல்லப்பட்டது. பின்பு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிலை வைக்கப்பட்டு நேற்று மதியம் கடையம் நோக்கி புறப்பட்டு சென்றது. ரத யாத்திரை பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஜூன் 1ஆம் தேதி கடையத்தைச் சென்றடையும் என சேவாலயா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும், ஜுன் 27ஆம் தேதி கடையத்தில் கவிஞர் பாரதியின் 125ஆவது திருமண நாளையொட்டி செல்லம்மா மற்றும் பாரதியின் உருவச் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் மெய் சிலிர்க்க வைத்த நடனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.