திருவள்ளூரையடுத்த ஈக்காடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (46). இவர் அப்பகுதியிலுள்ள செங்குன்றம் சாலையில் பழைய பொருட்களைச் சேமித்து வைக்கும் காயலான் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அந்த குடோனுக்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மினி வேன்களும் தீயில் எரிந்து கருகின. இதைக்கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அதிக அளவிலான தீ எரிந்ததால் அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்னர் உடனடியாக திருவள்ளூர், திருவூரில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகையினால் அப்பகுதில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டம்டம் பாறை வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீ!