ETV Bharat / state

குளியலறையில் ரகசிய கேமரா... காவல் துறை நடவடிக்கையில் மந்தம் என புகார் ...பின்னனி என்ன? - youngster kept camera in bathroom allegedly

செங்குன்றம் அருகே குளியலறையில் 2 சிறுமிகள் குளிப்பதை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்ததாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி இளைஞர் ஒருவரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

youngster arrested for keeping camera allegedly in bathroom
குளியலறையில் ரகசிய கேமரா இளைஞர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 12:49 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 16 மற்றும் 14 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்களது வீட்டில் எதிரே தென்னை ஓலையில் கட்டப்பட்ட குளியலறை உள்ளது. அவ்வப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பகுதியை சுற்றி வருவதாகவும் சம்பவம் நடைபெற்ற அன்று கூட குளியலறை அருகே நின்று கொண்டிருந்ததாகவும் இதனை சிறுமிகளின் தாய் நோட்டமிட அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனிடையே சிறுமி பள்ளிக்கு செல்ல குளியலறையில் குளிக்க சென்ற போது, அங்கு சிறிய ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து கேமராவை அகற்றாமல் உடனடியாக காவல்துறை அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இது குறித்து புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மீஞ்சூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை கைப்பற்றினர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட் என்பவரை மீஞ்சூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதனிடையே இன்று(ஆக.29) காலை முதல் விசாரணை மேற்கொண்டு வந்த மகளிர் காவல் துறையினர், சம்பவம் குறித்து நாளை மீண்டும் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குளியலறையில் ரகசிய கேமரா வைத்த நபரை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தும், குற்றத்தை உறுதி செய்த பின்பே நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறுவதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த சூழலில், குற்றவாளியை வெளியில் விடுவது தங்களுக்கு கூடுதல் அச்சத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும் விசாரணையின் பேரில், காலை தொடங்கப்பட்ட விசாரணை இரவு 9 மணி வரையிலும் நீடித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரையும் காவல் நிலையத்திலே வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப் பட்டதாகவும், அதன் பின்னரே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளன்ர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, "இந்த விவகாரம் தொடர்பாக தகவல் சேகரிக்க அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்கவில்லை. இதனை அடுத்து அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகார் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம் உறுதியாகும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசை வார்த்தையால் திகார் சிறை அதிகாரிக்கு பறிபோன ரூ.51 லட்சம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.