திருவள்ளூர்: சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (60). இவர் தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சத்யவேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கே.எஸ். நெடுஞ்சாலை வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியிலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதனால் காரில் இருந்த ரவி, குடும்பத்தினர் மொத்தம் ஒன்பது பேரும் காரை விட்டு உடனடியாக இறங்கியுள்ளனர். பின்னர் சில விநாடிகளில் கார் பற்றி எரிந்துள்ளது.
சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீர் அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது.
வாகனம் ஓட்டிய ரவியின் முன் முயற்சியால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..