திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர், ஊத்துக்கோட்டை வணிகர் சங்கம் இணைந்து சில நாள்களுக்கு முன்பு தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் தீநுண்மிப் பரவுதலைத் தடுக்கும்விதமாக அனைத்துக் கடைகளும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வியாபாரம் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் 2 மணி முதல் அனைத்து கடைகளும் கட்டாயம் அடைக்க வேண்டும் என அனைத்து கடைக்காரர்களும் ஒன்றிணைந்து அறிவித்து இன்று (ஜூன் 16) அதனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர்.
![police meeting to implement lockdown in tiruvallur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7633309_thuha.jpg)
அதன்படி அனைத்து கடைகளையும் அடைத்தனர். கடந்த சில நாள்களாகக் கூட்டம் அதிகமாகக் காணப்பட்ட பஜார் பகுதி தற்போது கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு - நகராட்சி