திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் ஐஜி அன்பு-வின் பூர்விக வீடு உள்ளது. அந்த வீட்டின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் பணம் மற்றும் ஒரு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி கண்காணிப்பு கேமரா பதிவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ள நோட்டு மற்றும் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றிய இருவர் கைது