திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புதிதாக பாரம்பரிய உணவகம் ஒன்று திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவகத்தின் முதல் நாள் என்பதால் ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியும் மூன்று ரூபாய்க்கு நாட்டுக்கோழி குருமாவுடன் புரோட்டா விற்பனையும் செய்யப்படுவதான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தகவல் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.
இதையடுத்து, உணவகத் திறப்பு விழாவான இன்று, வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டிபோட்டுக்கொண்டு, பிரியாணியை ஆர்வத்துடன் வாங்கி உணவகத்தில் அமர்ந்தபடியே மக்கள் ருசித்து சாப்பிட்டனர்.
ஆனால் தயாரிக்கப்பட்ட பிரியாணி, புரோட்டா குருமா அனைத்துமே இரண்டு மணிக்கெல்லாம் விற்பனை ஆகிவிட்டதால், பலர் ஒரு ரூபாய் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறுகையில்,"பாரம்பரிய உணவு வகைகளை சுவையுடன் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டது. மக்கள் தரும் ஆதரவைப் பொறுத்து, பாரம்பரிய உணவு வகைளையும் குறைந்த விலையில் விற்க முடிவு செய்துள்ளோம். இதில் லாபம் தங்களுக்கு முக்கியமல்ல' என்றார்.
இதையும் படிங்க: 'சாதிக்க துடிக்கும் (ஹெச்ஐவி ) பாசிட்டிவ் குழந்தைகள்'