திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான தனி குடியிருப்பு வளாகத்தில் சுமார் ஆறு மாதமான ஆண் குழந்தையை யாரோ அங்கு வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்த போது யாரும் உரிமை கோரி வராததால் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முகமது யாசிர் அரபாத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் சென்று குழந்தையை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின் அங்கிருந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக குழந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையைக் கோயில் வளாகத்தில் வீசிவிட்டு சென்றது யார் என்பது குறித்து திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.