திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் சிறப்பு ரத்த தான முகாம் இன்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, "ரத்த தானம் கொடுப்பதால் உடல் பலவீனம் ஆகும் என்றும் பலர் எண்ணிக்கொண்டு உள்ளனர். ஆனால் அது தவறான கருத்தாகும் ரத்த தானம் செய்வதால் நமது உடல் புத்துணர்ச்சியாகும். ரத்த ஓட்டம் சீராகும். ஆகையால் அனைவரும் ரத்த தானம் வழங்கலாம்" என்றார்.
நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுவதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் 60க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் வந்து ஆயுதப்படை காவல்துறை அனைவரிடமும் ரத்தத்தை பெற்று சென்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் வன்புணர்வு: 7 பேர் போக்சோவில் கைது!