நாடு முழுவதும் மிஸ்டு கால் மூலமாக பாஜக உறுப்பினர் சேர்க்கை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பொத்தூர் ஊராட்சியில் பாஜகவினர் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். இதில் வர்த்தகப் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் ஜெயக்குமார், பொத்தூர் ஊராட்சித் தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் யுகாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் உள்ளவர்களை உறுப்பினர்களாக சேர்க்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.