ETV Bharat / state

கமல் மீது பாஜக வழக்கறிஞர்கள் எஸ்.பி.யிடம் புகார் - மக்கள் நீதி மய்யம் கட்சி

திருவள்ளூர்: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பளாரிடம் பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

file pic
author img

By

Published : May 16, 2019, 10:09 AM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கமலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர் அணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பி.ஐசக் தலைமையில், கண்ணன், நாகரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Intro:இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்துக்கள் என்று பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்

Body:

15-05-2019

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்துக்கள் என்று பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்துக்கள் என்று பேசினார்.  கமலின் பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றன. இதே போல் திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் வழக்கறிஞர்கள் அணி  மாவட்ட செயலாளர் பி.ஐசக் தலைமையில் வழக்கறிஞர்கள் கண்ணன், நாகரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.  இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.