திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கே தற்காலிக ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒரு அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியுள்ளது. அருகில் கழிவு நீர் தொட்டியும் திறந்திருந்ததால் நச்சுக் காற்று உருவாகியுள்ளது. இதைக் கவனிக்காமல் வேலை செய்து வந்த 4 பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.
பின்னர், அவர்கள் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: Red Alert: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு