ETV Bharat / state

திருவள்ளூரில் திபுதிபுவென புகுந்த 150 பேர்: வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்து அராஜகம்! - வாக்குப்பெட்டியை எரித்த அடையாளம் தெரியாத நபர்கள்

திருவள்ளூர்: பப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப் பெட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

வாக்குப் பெட்டி தீ வைத்து எரிப்பு
வாக்குப் பெட்டி தீ வைத்து எரிப்பு
author img

By

Published : Dec 27, 2019, 5:24 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பப்பரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த 150-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வாக்குச்சீட்டில் முத்திரை போடுவது தவறாக உள்ளது எனக் கூறி திடீரென்று வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறி புகுந்தனர்.

பின்னர், அங்கிருந்த அலுவலர்களை ஒரு அறையில் பூட்டிவிட்டு, வாக்குப்பெட்டியிலிருந்து வாக்குச் சீட்டுகளை கீழே கொட்டி அதை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

திடீரென நடந்த இச்சம்பவத்தால் அங்கிருந்த பாதுகாப்பிலிருந்த சில காவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

வாக்குப் பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட வாக்குச்சாவடி

இது குறித்து, கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கரடுமுரடான சாலை... வாக்குப்பதிவு பெட்டி சுமந்துசெல்லும் அவலம்: தேர்தலுக்குப் பிறகேனும் தீர்த்துவைக்குமா அரசு?

Intro:திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பப்பரம்பக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சீட்டில் முத்திரை போடுவது தவறாக உள்ளது என்றும் காசு வாங்கிக்கொண்டு முத்திரை போட்டுக் கொள்வார்கள் என்றும் திடீரென்று 150க்கும் மேற்பட்டோர் திடீரென வாக்குச்சாவடி மையத்துக்குள் புகுந்து அலுவலர்களை ஒரு அறையில் பூட்டிவிட்டு 600க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு செய்யப்பட்ட சீட்டுக்களை வாக்குப் பெட்டியில் இருந்து கீழே கொட்டி அதை எரித்து விட்டு வாக்கு பெட்டியை கொண்டு சென்றுள்ளன திடீரென இந்த சம்பவம் நடந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் குறைவாக உள்ள காவல்துறை ஒன்றும் செய்ய முடியாமல் திக்கு முக்காடி நின்றது அறையில் உள்ள நாற்காலிகள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு அனைத்தும் கலைக்கப்பட்டது . 1 3 4 5 வாக்கு மையங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்டிஓ மற்றும் தாசில்தார் பாண்டியராஜன் அவர்கள் தெரிவிக்கையில் இதுகுறித்து 32 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் தொடர்ந்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி ஆர்டிஓBody:திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பப்பரம்பக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சீட்டில் முத்திரை போடுவது தவறாக உள்ளது என்றும் காசு வாங்கிக்கொண்டு முத்திரை போட்டுக் கொள்வார்கள் என்றும் திடீரென்று 150க்கும் மேற்பட்டோர் திடீரென வாக்குச்சாவடி மையத்துக்குள் புகுந்து அலுவலர்களை ஒரு அறையில் பூட்டிவிட்டு 600க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு செய்யப்பட்ட சீட்டுக்களை வாக்குப் பெட்டியில் இருந்து கீழே கொட்டி அதை எரித்து விட்டு வாக்கு பெட்டியை கொண்டு சென்றுள்ளன திடீரென இந்த சம்பவம் நடந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் குறைவாக உள்ள காவல்துறை ஒன்றும் செய்ய முடியாமல் திக்கு முக்காடி நின்றது அறையில் உள்ள நாற்காலிகள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு அனைத்தும் கலைக்கப்பட்டது . 1 3 4 5 வாக்கு மையங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்டிஓ மற்றும் தாசில்தார் பாண்டியராஜன் அவர்கள் தெரிவிக்கையில் இதுகுறித்து 32 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் தொடர்ந்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி ஆர்டிஓConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.