பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராம்ஜிகவுதம், தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஒருங்கிணைப்பாளர்கள் வீர்சிங், கௌரி பிரசாத் உபாசக் ஆகியோர் பங்கேற்று, 55 பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தனர்.
பின்னர் ஒவ்வொரு வேட்பாளரும் மக்கள் விரோத போக்கு ஆட்சியை கவிழ்த்து, பகுஜன் சமாஜ் கட்சியை வெற்றி பெற செய்து, ’மக்களுக்காக நேர்மையுடன் அயராது உழைக்க பாடுபடுவேன்’ என உறுதிமொழி ஏற்றனர். அனைத்து மாவட்ட தலைவர்கள், தொகுதி தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தை சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: ஐஜேகே - சமக புதிய கூட்டணி!