திருவள்ளூரில் உள்ள ஆர்.எம். ஜெயின் அரசு உதவி பெறும் பள்ளியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ”கருவில் வளரும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் கருகலைப்பு செய்வது குற்றம். குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்றும் குழந்தை திருமணங்களை தடுக்க பாடுபடுவோம் என்றும் பெண் கல்வி வளர்ச்சிக்காக உழைத்திடுவோம் என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உறுதிமொழி வாசிக்க மாணவிகள் உறுதி ஏற்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியை சமுதாய முன்னேற்றத்திற்கான வெற்றி என மாவட்ட ஆட்சியர் வாசகங்களை எழுதி கையெழுத்திட்டார். அதில் மாணவிகளும் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்