ETV Bharat / state

திருவள்ளூரில் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை! - தேர்தல் விழிப்புணர்வு

திருவள்ளூர்: தேர்தலில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் பரப்புரை, உறுதிமொழி ஏற்பு என மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
author img

By

Published : Mar 19, 2019, 6:49 PM IST

100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தலில் 100சதவிகிதம் வாக்களிப்போம். ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என மகளிர் சுய உதவிக்குழுவினரின் உறுதிமொழியேற்பும், பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஒட்டியும், பயணிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஜனநாயக கடமையான வாக்களிப்பை தவறாமல் செய்யவோம். வாக்கிற்கு பணம் வாங்க மாட்டோம் எனும் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மகளிர் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேருந்துகளில் ஒட்டியும், பயணிகளுக்கு வழங்கியும் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அப்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகண்ட திரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த காணொலிகள் ஒளிபரப்பபட்டன.

மார்ச் .19

                        திருவள்ளூர் மாவட்டத்தில் 100  சதவிகிதம் வாக்களிப்போம் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்பதை  வலியுறுத்தும் வகையில்  பேருந்து , ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியேற்று பிரச்சாரத்தை தொடங்கி வைத்தாா்஛   

நடைபெற உள்ள 17வது மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் 100 சதவிகிதம் பேர் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பேருந்தில் ஒட்டியும், பயணிகளுக்கு நேரில் வழங்கியும் வாக்களிக்க வேண்டும் என்பதை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வலியுறுத்தினார். செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சிறப்பு பேருந்தில் உள்ள திரையில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றது. இதனை ஏராளமான பொது மக்கள் பார்த்து சென்றனர். ஜனநாயக கடமையான வாக்களிப்பை தவறாமல் செய்யவோம் என்றும் வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க அதனை மகளிர் குழுவினர்  ஏற்றுக் கொண்டனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் 71 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவானதையொட்டி இந்த தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும்,  குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி, அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.      visual mojo app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.