ETV Bharat / state

'டும்! டும்! தீவிரமாகும் கரோனா' - தண்டோரா மூலம் அறிவுறுத்தல் - Awareness on Corona in Tiruvallur

திருவள்ளூர்: கரோனா பரவும் அபாயம் இருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா குறித்து தண்டோரா மூலம் விழிப்புணர்வு

author img

By

Published : Mar 27, 2020, 6:31 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இளைஞர்களும் வெளியே சுற்றித் திரிகின்றனர்.

இதனால், பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் கிராமத்தில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் போன்றவை தெளித்தும் நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா குறித்து தண்டோரா மூலம் விழிப்புணர்வு

இதைத் தொடர்ந்து, ஆவூர் ஊராட்சி மன்றத்தலைவர் டில்லி பாபு தலைமையில், "அனைவரும் 144 தடை உத்தரவை மதித்து வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்து கரோனா தொற்றை ஒழிக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: காட்டுத்தீயில் பெண் குழந்தைகள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.