திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளியோர் ஊரடங்கு உத்தரவால் பாதிப்படையாமல் இருக்க, திருத்தணி ரயில் நிலையத்திற்கு எதிரிலுள்ள அம்மா உணவகத்திற்கு நான்காம் கட்ட ஊரடங்கில் ரூ. 51 ஆயிரம் காசோலையை திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளரும், அரக்கோணம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோ. அரி நகராட்சி அலுவலர்களிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து திருத்தணி பஜார் பகுதியில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும் மேலும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவினையும் வழங்கினார்.
இதற்கு முன்பு முதல்கட்ட ஊரடங்கு உத்தரவில் அம்மா உணவகத்திற்கு காய்கறி, அரிசி, மளிகைப் பொருள்கள், சமையல் எண்ணெய்த் தொகுப்பினை வழங்கினார்.
இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் 44 ஆயிரம் ரூபாய்கான காசோலை வழங்கினார். மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் 56 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.