சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த மாதம் 18ஆம் தேதி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் திறப்பு இரண்டாயிரத்து 500 கனஅடியாக உள்ளது. கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்து அடைந்த நிலையில், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் நீரானது தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நீரானது சென்னை குடிநீர் தேவைக்காக புழல், செம்பரம்பாக்கம், ஏரிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும். கடந்த 15 நாள்களிலேயே தமிழ்நாடு கண்டலேறு அணையிலிருந்து ஒரு டிஎம்சி நதிநீர் கிடைத்துள்ளது.
இந்த மாதத்தில் தமிழ்நாட்டிற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அலவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூண்டி சத்யமூர்த்தி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 24 அடியை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறப்பு!