ETV Bharat / state

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தார்ஷீட் கம்பெனியில் தீ விபத்து- பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

author img

By

Published : Feb 6, 2022, 9:31 AM IST

அம்பத்தூரில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் ஒரு தார்ஷீட் கம்பெனியில் தீ விபத்து ஏற்ப்பட்டது, இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தார்ஷீட் கம்பெனியில் தீ விபத்து- பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

திருவள்ளூர்:அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, ஆவின் பால் பண்ணை சாலையை ஒட்டி "தார் ஷீட்" தயாரிக்கும் நிறுவனம் இயங்கிவருகிறது.

இங்குத் தயாரிக்கப்படும் தார் ஷீட் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும், இங்கு மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த கேசவலு (52) என்பவர் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்குச் சென்றனர். பின்னர், இரவு நேரப் பாதுகாப்புப் பணியில் காவலாளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 3 மணியளவில் நிறுவனத்தின் ஒரு பகுதியிலிருந்து கறும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அப்பகுதியில் தீ மளமளவெனப் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்த அங்கு இருந்த காவலாளிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தார்ஷீட் கம்பெனியில் தீ விபத்து- பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

பல லட்சம் பொருள்கள் சேதம்

தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலிருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் 25 வீரர்கள் வந்தனர்.

அங்கு வந்த அவர்கள் வாகனங்களிலிருந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பிறகு, தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரம் போராடி நிறுவனத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.

இதில் தார் ஷீட்கள், மூலப்பொருள்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமாகின. இதனால், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசமானது எனக் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறை ஆய்வாளர் மல்லிகா தலைமையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமாவளவன் குறித்து அவதூறு: டிஜிபி அலுவலகத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.