திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மருங்குளம் கிராமத்தில் கல்யாண வரதராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமராஜ்(45) குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வேர்க்கடலை பயிரிட நிலத்தை அவர் உழுது கொண்டிருந்தபோது, மூன்று அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை நிலத்தில் புதைந்திருந்ததைக் கண்டெடுத்தார். இதைத்தொடர்ந்து ராம்ராஜ் திருத்தணி வருவாய்த் துறையினர், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி தாசில்தார் உமா, சுமார் 4 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலையை மீட்டு திருத்தணி கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: பழைய இரும்புக் கடைக்குச் செல்லும் விசைத்தறிகள்...?