அதிமுக கூட்டணியில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரின் மகள் கே.எஸ்.வி.சஞ்சனா தலைமையிலான 100க்கும் மேற்பட்டோர், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுக வெற்றி பெற்று வரும் தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், கும்மிடிப்பூண்டி தொகுதியை மீண்டும் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு