திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையைச் சேர்ந்தவர் மனோகரன். அதிமுக பிரமுகரான இவர் இரண்டாவது முறையாக கொண்டக்கரை ஊராட்சியின் தலைவராக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் (மே.15) இரவு குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, டிப்பர் லாரியில் வந்த 10 பேர் மனோகரனை அவரது குடும்பத்தார் கண்முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி - திருவற்றியூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் பெண் மரணம்-கணவனை அடித்து துவைத்த பெண்ணின் உறவினா்கள்