திருவள்ளூர் ஒன்றியத்தின் தேமுதிக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக இரண்டாவது வார்டு எண் ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக கூட்டணியில் இருப்பதால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அந்தப் பகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதே வார்டில் அதிமுகவைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் இவரை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால், அதிமுக உறுப்பினரிடம், 'வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிடுங்கள்' என்று ரஜினிகாந்த் மன்றாடியுள்ளார். ஆனால் அவர் திரும்பப் பெறவில்லை.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிப்பு ஒன்றிய அலுவலகத்தில் வெளியிடத் தொடங்கியதும் மனமுடைந்த ரஜினிகாந்த், தனது பாக்கெட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து அங்கேயே அருந்தியுள்ளார்.
பின்னர் மயங்கி விழுந்த அவரை, உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் - எம்.பி. ஜோதிமணி