திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி குவார்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு 100 மீட்டர் முன்பாக அதிமுகவினர், திமுக தங்களது கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. பின் அந்த தகராறு மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
![கும்மிடிப்பூண்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-trl-04-sandal-via-scr-tn10036_06042021182353_0604f_1617713633_743.png)
இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை விரட்டினர். இருப்பினும், அந்த முயற்சி பலனளிக்காமல் போகவே கூடுதலாக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். துணை ராணுவ படையினரும் அங்கு வந்ததைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் கூடுதலான துணை ராணுவப் படையினரும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்த கனிமொழி