திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணி சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி பெருவிழா இன்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அந்த வகையில் பால் காவடி, பன்னீர் காவடி புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். இந்நிலையில் திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவரும் பிரபல இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் வேண்டுதல் நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருத்தணியில் உள்ள முருகன் கோயிலை ஆண்டுதோறும் வந்து தரிசித்து செல்வதாகவும் தானும் குடும்பமும் மட்டுமல்லாது ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தாரும் நீடூழி வாழ வேண்டும் என்று முருகனை பிரார்த்தித்தாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிபூரம் பிரம்மோற்சவம் கொடியேற்றம்