திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து சுமார் 3 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு படகு மூலம் கடத்துவதாக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல் உத்தரவின் பேரில் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவியாளர் மாலதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு, ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாகனத்தை பிடித்து சுமார் 3 டன் மதிப்புள்ள தலா 50 கிலோ எடை அளவுள்ள 60 மூட்டைகள் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர் மற்றும் படகு உரிமையாளர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணுடன் உறவு...வலைதளத்தில் வீடியோ லீக்...இளைஞர் தற்கொலை