ETV Bharat / state

மயக்க ஊசி செலுத்தி நகை திருட்டு; போலி மருத்துவர் கைது

ஆவடி அருகே சிகிச்சை அளிப்பதாகக் கூறி மயக்க ஊசி செலுத்தி நகையைத் திருடிய போலி மருத்துவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மயக்க ஊசி செலுத்தி நகை திருட்டு; போலி மருத்துவர் கைது!

author img

By

Published : Feb 7, 2022, 10:16 AM IST

ஆவடி: முத்தாபுதுப்பேட்டை பகுதியில் வேணி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக மருந்துக்கடை, கிளினிக் வைத்துள்ளார் கடந்த சில மாதங்களாகப் பகுதி நேர மருத்துவர் இவர் கிளினிக் தேவைப்பட்டது. இதன் காரணமாக மருத்துவர் தேவை என ஓஎல்எக்ஸில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

இதைக்கண்ட ஒருவர் இவரைத் தொடர்புகொண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த ரீகன் பிரபு என்பவர் தான் ஒரு மருத்துவர் எனவும், நான் சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பகுதி நேர மருத்துவராகப் பணிபுரிந்துவருவதாகவும் கூறியுள்ளார்.

கிளினிக் உரிமையாளர் வேணி, உங்களிடம் உள்ள மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்து மருத்துவப் பணி மேற்கொள்ளலாம் என்று கூறினார். மூன்று நாள்களில் கொடுக்கிறேன் என்று அந்நபர் கூறியுள்ளார்.

பின்பு கடந்த ஒரு வாரமாக இவர் வேணி நடத்திவரும் மருந்து கிளினிக்கில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற நோயாளி கடந்த வாரம் குடல் பிரச்சினை சிகிச்சைக்காக வேணி கிளினிக்கிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள்கள் சிகிச்சைக்குச் சென்றுவந்துள்ளார்.

சிகிச்சையில் மயக்க ஊசி செலுத்தி தாலி திருட்டு

சம்பவத்தன்று பிரியா சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். முகத்தில் சுவாசம் அளிக்கும் உபகரணத்தை வைக்க வேண்டும் எனக் கூறி பிரியா அணிந்திருந்த தாலிச் சங்கிலியைக் கழற்ற கூறியுள்ளார். இதனை மறுக்கவே தாலியைச் சற்று உயர்த்தி காதில் மாட்டிக்கொண்டுள்ளார்.

அப்பொழுது அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடி அங்கிருந்து மாயமானார். மயக்கம் தெளிந்த பிரியா இது குறித்து குடும்பத்தினரிடமும் முத்தாபுதுப்பேட்டை காவல் துறையிடம் புகார் அளித்தனர், இது குறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் அவரை தொலைபேசி எண்ணை வைத்துத் தேடிவந்தனர்.

மருத்துவ உதவியாளர் மருத்துவராக மாறி பித்தலாட்டம்

இந்நிலையில் நேற்று மாலை திருவொற்றியூரில் பதுங்கியிருந்த போலி மருத்துவர் ரீகன் பிரபுவைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் மேலும் இவர் டிப்ளமோ மருத்துவ உதவியாளராக இரண்டு ஆண்டுகள் படிப்பு கொல்கத்தாவில் முடிந்ததாகவும் சான்றிதழ் வைத்துள்ளார்.

மருத்துவ உதவியாளராகப் படித்துவிட்டு மருத்துவராக நடித்துப் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரிடமிருந்து ஐந்து சவரன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் கைதுசெய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மருத்துவ உதவியாளர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவராக மருத்துவம் பார்த்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தொடர் கொலை முயற்சிகள்..! : ரேசர் கணேசனை வலை வீசித் தேடும் காவல்துறை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.