திருவள்ளூர்: பூந்தமல்லி பகுதியில் 2000ஆம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் சின்னமாரி, டேவிட்பினு, பீட்டர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 2001ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிறையிலிருந்த மூன்று பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மூன்று பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். இதில் தப்பி ஓடியபோது சின்னமாரியை போலீசார் சுட்டனர்.
டேவிட் பினு மற்றும் பிட்டர் தப்பிச் சென்றதை அடுத்து போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த வழக்கில் தப்பிச் சென்ற இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த வேண்டும் என நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார். இதனையடுத்து பூந்தமல்லி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், டேவிட் பினு கேரள மாநிலம் கொல்லம் சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: புளியங்குடி காவல் ஆய்வாளருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம்!
இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி போலீசார் டேவிட் பினுவை கேரள போலீசார் உதவியுடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். பின்பு டேவிட் பினுவை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைக்க அழைத்ச்து சென்றனர்.
முன்னதாக தப்பிச் சென்ற டேவிட் பினு பல்வேறு மாவட்டங்களில் தனது பெயரை காவநாடு சசி என மாற்றி பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் மட்டும் இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதும் பின்னர் தெரிய வந்துள்ளது.
குற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு அழைத்துவிட்டு செல்லும்போது போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய நபரை சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கேரளா ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி யாருக்கு? லாட்டரி எண் அறிவிப்பு..