ETV Bharat / state

ஊராட்சி மன்றத் தலைவரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கைது - panchayat leader

கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவரை சராமரியாக வெட்டிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

யுவராஜ்
யுவராஜ்
author img

By

Published : Oct 22, 2021, 11:38 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகிப்பவர் யுவராஜ் (38). அதிமுகவைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் (அக்.20) காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அவருடன் ஊராட்சி செயலாளர் வினோத் (22) பணியிலிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் ஊராட்சிமன்ற தலைவர் யுவராஜிடம் வீட்டு வரி செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நீங்கள் யார் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? எனக் கேள்வி கேட்டுள்ளனர். உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்து வினோத், கூச்சலிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே ஓடியுள்ளார். வினோத் கூச்சலிட்டதைக் கண்டு உடனே அந்தக் கும்பல் தப்பிச்சென்றது.

இதனைத் தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யுவராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக யுவராஜின் மனைவி கவிதா பாரதி மப்பேடு காவல் நிலையத்தில், திமுக கிளைச் செயலாளர் சதாசிவம் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனப் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்கள் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மப்பேடு காவல் நிலையம் எதிரில், சதாசிவம் உள்ளிட்ட கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் சதாசிவம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவருக்கு அரிவாள் வெட்டு; இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.