ETV Bharat / state

கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு - கர்ப்பிணிக்கு கரோனா தடுப்பூசி

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 9 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9-month-pregnant woman dies
9-month-pregnant woman dies
author img

By

Published : Sep 30, 2021, 5:12 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த புதூர் மேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவரது மனைவி லாவண்யா (25 ). இருவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. லாவண்யா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு வளைகாப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லாவண்யா செப்.26ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாமில் 2ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இதையடுத்து நேற்று நள்ளிரவில் இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும் வழியிலேயே உயிரிழந்தார். இவர் 90 நாட்களுக்கு முன்பு முதல் தவணை கொரோன தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

இதனிடையே கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.