திருவள்ளூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாள் உணவுத் திருவிழா ஆவடியில் துவங்கப்பட்டுள்ளது.
ஆவடி கனரக தொழிற்சாலை மைதானத்தில் நடைபெறும் இந்த உணவுத்திருவிழா ஜூன் 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து உணவு அரங்குகளைப் பார்வையிட்டார்.
130 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவுத்திருவிழாவில் கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக ஆவின் பாலில் ஆன ராட்சத ஃபலூடா தயார் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பயன்படுத்த 1 லட்சம் லிட்டர் சமையல் எண்ணெயில் இருந்து டீசல் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: யார் அந்த "மங்கி குல்லா" கொலையாளி?: தேடித்தவிக்கும் கன்னியாகுமரி போலீஸ்!