திருவள்ளூரில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி விற்பனைசெய்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 82 ஆயிரம் ரூபாய், 3 இருசக்கர வாகனங்கள், 8 செல்போன்களை காஞ்சிபுரம் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு காவல் துறையினர் பறிமுதல்செய்து திருவள்ளூர் நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் வசந்திக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு செய்யப்பட்டது.
இந்தக் கண்காணிப்பில் கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைசெய்த ஆறு பேரை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
கைதான பூந்தமல்லியைச் சேர்ந்த கோபிநாத், தயாளன், சுகுமார், ஸ்ரீதர், ஜானகிராமன், தமிழ்வாணன் ஆகியோரிடமிருந்து 82 ஆயிரத்து 674 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள், 8 செல்போன்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
பின்னர் கைதுசெய்யப்பட்ட 6 பேரும் திருவள்ளூர் நகர காவல் துறையினர் ஒப்படைக்கப்பட்டு தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க:லக்கா மாட்டிக்கிச்சு..பம்பர் லாட்டரி ஒன்னு: உயிர் பெறும் கேரள இளைஞர் சின்ன சின்ன ஆசைகள்...!