திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டை, பெத்திகுப்பம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பல வீடுகளில் கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் தேர்வழியைச் சேர்ந்த சுரேஷ், குகன், பாக்யராஜ், திருமலை, சூர்யா மற்றும் அயனநல்லூரை சேர்ந்த விஜயகுமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. மேலும், அவர்கள் குற்றச் சம்பவத்திற்காக பயன்படுத்திய போலிரோ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் விசாரணையில் ஒரு செயின், 4 காதணிகள் உள்பட 3 சவரன் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தங்கையின் திருமண வாழ்க்கைக்கு இடையூறு: முன்னாள் காதலனை கொலை செய்த அண்ணன்