திருவள்ளூர்: திருத்தணி மோசூர் ரயில் நிலையம் மற்றும் திருவலங்காடு ரயில் நிலையம் பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று (செப்.17) சிக்னல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் இணைப்பு பகுதிகளில் சரி செய்ய முடியாமல் ரயில்வே ஊழியர்கள் இரண்டு மணி நேரம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், கோவை எக்ஸ்பிரஸ், அரக்கோணத்தில் இருந்து வர வேண்டிய மின்சார ரயில்கள் அனைத்தும் திருவலங்காடு ரயில் நிலைய பகுதியில் நிற்கவைக்கப்பட்டது.
இதே போல் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல வேண்டிய ரயில்கள், திருத்தணி மற்றும் அரக்கோணம் செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் என அனைத்து ரயில்களும் இரண்டு மணி நேரம் அந்த பகுதியில் நிற்கவைக்கப்பட்டது.
இதனால், வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய ரயில் பயணிகள் மற்றும் வேலைகளுக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள் அனைவரும் ரயில்களில் சீக்கி கொண்டனர். இதில் சுமார் 5,000 ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
அதன் பிறகு இரண்டு மணி நேரம் காலதாமதத்திற்கு பிறகு ரயில் தண்டவாளம் சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து நடைபெற்றது. இதனால் ரயில் தண்டவாளப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: NIPER நிறுவனத்தில்Veterinary Officer காலிப்பணியிடங்கள்...நாளை கடைசி நாள்