கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் இயக்கப்பட்ட ஒரு மினிவேன், ஐந்து இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், 40 இருசக்கர வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து கடற்கரை ஓரங்களில், தெருக்களில் பொது இடங்களில் தேவையின்றி பொதுமக்கள் நிற்கக்கூடாது என்றும் மக்களை வீடுகளுக்குள் செல்லுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதுமட்டுமல்லாமல், ஆங்காங்கே ஒலிப்பெருக்கி மூலம் யாரும் வெளியே வரக்கூடாது எனவும் வலியுறுத்தினர். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: '24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை' - அமைச்சர் தங்கமணி