திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் நவீன சோதனைச்சாவடியில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோவில் வந்த சோழவரம் அழிஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர் (56) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையில் அவரை பரிசோதனை செய்ததில், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கூடலூரில் இருந்து முன்பின் தெரியாத நபரிடம் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்ததாகவும், அதை சென்னையில் விற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உ.பி.யில் நூதன முறையில் சரணடைய வந்த தேடப்பட்ட குற்றவாளி!