திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 1000 தடுப்பூசி மையங்களில் 4 ஆயிரம் பணியாளர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கு முன்பு நடைபெற்ற 27ஆவது கரோனா தடுப்பூசி முகாம்களில் 14 லட்சத்து 49 ஆயிரத்து 429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதேபோல் திருவள்ளுர் மாவட்டத்தில் 18 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 17 லட்சத்து 58 ஆயிரத்து 291 பேருக்கும், இரண்டாவது தவணை 13 லட்சத்து 96 ஆயிரத்து 593 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு முதல் தவணை ஒரு லட்சத்து 3ஆயிரத்து 995 பேருக்கும், இரண்டாவது தவணை 79ஆயிரத்து 943 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
12 முதல் 14 வயது வரை முதல் தவணை 53ஆயிரத்து 544 பேருக்கும் 2ஆவது தவணை 11ஆயிரத்து 878 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 549 பேர் உள்ளனர். இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் 4 லட்சத்து 48ஆயிரத்து 201 பேர் உள்ளனர்.
இந்நிலையில், ஆவடி மார்க்கெட் பகுதியில் 28ஆவது கரோனா தடுப்பூசி மாபெரும் முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். மேலும், பூஸ்டர் தடுப்பூசியானது ஒரு லட்சத்து 4ஆயிரத்து 674 பேருக்கு சிறப்பு முகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஐடியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக அதிகரிப்பு!