திருவள்ளூரில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தில் இன்று மட்டும் 19 நபர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 566ஆக உயர்ந்துள்ளது. இதில் 179 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால் 382 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ள திருநின்ற ஊரில் இருவரும் ஆவடியில் ஒருவரும் பூந்தமல்லியில் ஆறு பேரும் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏழு பேர், வில்லிவாக்கம், பள்ளிப்பட்டு பகுதியில் தலா ஒருவர் உள்ளிட்ட 19 பேர் அரசு மத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 320 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி