திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொகுசு கார்கள் திருடுபோவது தொடர் கதையாக இருந்துவந்தது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாகத் தேடப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன், கம்மார்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன், நந்திமங்கலத்தைச் சேர்ந்த பரத் ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்களுக்கும் கார் திருட்டிற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
உடனே அவர்களிடமிருந்த 19 சொகுசு கார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 1.5 கோடி என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ஜிஆர்டியில் நகை கையாடல் - உதவி மேலாளர் மீது புகார்!