திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உதவி ஆய்வாளர் வரதராஜன் தலைமையில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார் ஒன்று காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டதும் நிற்காமல் விரைந்து சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தக் காரை காவல் துறையினர் காரை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து, காரில் சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25,000 ரூபாய் மதிப்புடைய 182 மதுபாட்டில்களைக் கண்டறிந்து காரையும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோட முயன்ற நான்கு பேரைக் கைது செய்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனிதநேயமிக்க மலப்புரம் மக்களுக்கு நன்றி - ஏர் இந்தியா ட்வீட்