திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பாஜக ஒன்றிய செயலாளர் யோகநாதன் என்பவரை காவல்துறையினர் விநாயகர் சதுர்த்தி அன்று ஏற்பட்ட பிரச்னை காரணமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்தபோது, எதிர்தரப்பினர் மீது நாங்களும்தான் புகார் கொடுக்கவந்துள்ளோம். ஏன் எங்களை கைது செய்கிறீர்கள்" என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் இருந்த தலைமை காவலர், யோகநாதன், அவருடன் கைது செய்யப்பட்டவர்களை உள்ளாடைகளுடன் காவல் நிலையத்தில் உட்காரவைத்தாகவும், அவர்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைமை காவலர் மீது நடவடிக்க எடுக்கவேண்டும் என யோகநாதன் ஆய்வாளரிடம் மனுஅளித்துள்ளார். மனு மீதான நடவடிக்கை இதுவரை எதுவும் இல்லை எனக் கூறி யோகாநாதன் உள்பட 18 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்றபோது மாவட்ட ஆட்சியரை ஒருமையில் பேசி முழக்கமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருவள்ளூர் குற்றவியல் நடவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருத்தணி கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர்.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மாவட்ட விவசாய செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கம்பம்; இஸ்லாமியர்கள் காவல்நிலைய முற்றுகை போராட்டம்!