திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முனிவேல். இவரது மனைவி ரேக்கா. இந்த தம்பதியின் மகன் விஷ்வா (12). இவரது வீட்டிற்கு அருகே நேற்று காலை (மே.7) விஷப்பாம்பு நுழைந்துள்ளது. இதையறியாத சிறுவன் விஷ்வா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, விஷப் பாம்பு சிறுவன் விஷ்வாவை தீண்டியுள்ளது. இது குறித்து தகவலறிந்த சிறுவனின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொட்டகரை அரசு பொது மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளித்த பின்னர், 108 அவசர ஊர்தியில் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அவசர ஊர்தி ஊழியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்த பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க:பேனரை அகற்ற சொன்ன முதலமைச்சர்!