ETV Bharat / state

சமையல் கற்றுக்கொள்ள சொன்ன தாய் - மனமுடைந்த இளம்பெண் தற்கொலை - சமையல் கத்துக்கொள்ள சொன்ன தாய்

திருநெல்வேலியில் திருமணம் நடக்க இருப்பதால் சமையல் கற்றுக்கொள் என தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்துகொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 22, 2023, 8:30 PM IST

திருநெல்வேலி: மூனைஞ்சிபட்டி அருகேவுள்ள கீழகோடன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குப்புராஜ். அவரது மனைவி கனகமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குப்புராஜ் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவரது மகள் கிறிஷ்டில்லா மேரிக்கு சமீபத்தில் திருமண நிச்சயிக்கப்பட்டு வரும் 1ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்த நிலையில் கிறிஸ்டிலாமேரி வீட்டு வேலை செய்யாமல் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தாய் ’உனக்கு திருமணம் நடக்க உள்ளது, அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள்ள வேண்டும்’ என அவரை அடிக்கடி கண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த கிறிஷ்டில்லா மேரி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மூலைக்கரைப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நிச்சயமான நிலையில் சமையல் கற்றுக்கொள்ளும்படி தாய் கூறியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Video Leak: GH-ல் சிகிச்சைக்கு சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் ஊழியரால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.