நெல்லை மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர் ஐயப்பன். சென்னையில் வேலை செய்து வரும் இவருக்கு இந்திரா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்திரா தனது குழந்தைகளுடன் தெற்கு வள்ளியூரில் உள்ள தனது கணவரின் வீட்டில் வசித்து வருகிறார்.
ஜயப்பன் தனது ஊரிலேயே வயல் வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில் இன்று (மே.28) கதிரேசன் தோட்டத்திற்கு இந்திரா வயல் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது தோட்டத்தின் உரிமையாளர் கதிரேசன் தனது மோட்டர் அறையை சுத்தம் செய்யக் கூறி இந்திராவிடம் விட்டுச் சென்றுள்ளார்.
அங்கு சென்று அவர் மோட்டர் அறையைச் சுத்தம் செய்தபோது அருகில் கிடந்த மின் ஒயரில் கைப்பட்டு, அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சத்தம் கேட்டு அருகில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி இந்திரா பலியானது தெரிய வந்தது.
இதனையடுத்து பணகுடி காவல் துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.