ETV Bharat / state

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மீது புகார் - திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்

திருநெல்வேலி: 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அபகரிக்க முயலுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Tirunelveli DMK MP
Woman complains DMK MP
author img

By

Published : May 15, 2020, 5:11 PM IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில் ”நெல்லை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், அவரது மகன்கள் உள்பட 10 பேர் சேர்ந்து எங்களுக்குச் சொந்தமான கருங்குளத்தில் உள்ள ரூ. 50 லட்சம் மதிப்பிலான சுமார் 10 சென்ட் நிலத்தைச் சுற்றி முள்வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதை நாங்கள் தடுக்க முயன்ற போது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து பணகுடி காவல் நிலையம் மற்றும் வள்ளியூல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு நேரடியாக மனு கொடுக்கச் சென்ற போதும் புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மீது பெண் புகார்

எனவே, எங்கள் நிலத்தை அபகரிக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்பட 10 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வரதட்சணை கேட்ட கணவர் - தூக்கு கயிற்றில் வாழ்க்கையை முடித்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.